University students in Jaffna defy subjugation, observe Mu'l'livaaykkaal Remembrance

[TamilNet, Monday, 16 May 2011, 18:05 GMT]
More than 600 students from all the faculties of Jaffna University, came together Monday to observe Mu'l'livaaykkaal Remembrance, defying the threatening presence of Sri Lankan riot police commandos, Sri Lanka Army soldiers and intelligence operatives at the University premises between 11:00 a.m. and 12:30 p.m. The Jaffna University Students Union urged the Tamils to excel in knowledge by continuing to focus on education and resolved that any effort to find a political solution should be founded on ‘historical realities’ and that those who claim to conduct ‘negotiations’ with the government should be mindful that their mandate is vested with people and all sections of the Tamil Nation should be consulted before finalising any model. Sinhala and Muslim students also took part in the remembrance event.

Valika'l sumantha vaaram
Valika'l sumantha vaaram


Several student representatives from various faculties spoke at the event, which was titled Valika'l Sumantha Vaaram (The Week of Pains). Many of the speakers urged the International Community to follow up the UN Panel report and enable a permanent solution.

The event, which was earlier scheduled to take place at Kailasapathy Auditorium, was conducted at the hall of the Student Union, as the University administration, pressurized by paramilitary hierarchy in Jaffna, had denied access to the auditorium.

The Students Union issued a statement following the event.

The process of finding a political solution to the Tamil national question needs to be a broader, participatory and debated process, involving all the sections of Tamil Nation, before anyone claiming to be engaged in negotiations, attempt to finalise any model on behalf of the Tamil people, the statement said reminding the Tamil leaders to be mindful on their mandate which lies with the people.

Democratic aspirations of the Tamil people cannot be confined to secrecy and confidential talks, the statement said.

The statement severely criticised Sri Lankan government's so-called ‘development programme’. The ordinary civilians have not gained anything of the development programmes conducted with massive investments, the statement said. People affected by the war are still unable to gain any meaningful aid.

Welcoming the role of Tamil diaspora in building social institutions and taking care of development and the infrastructure, the JUSU statement said the effort needed proper coordination.

The statement also said the JUSU was working hard to maintain its independency despite attempts by elements within and outside the University to discredit its relationship with the people.

Recalling the remembrance event held last year, student representatives who talked to journalists said they were harassed following the last year Mu'l'livaaykkaal Remembrance event by the Sri Lankan military intelligence personnel who came to their houses for interrogation. Despite such harassments, the Union had resolved to conduct the remembrance event this year, they said describing that the event was peacefully and successfully observed.

Valika'l sumantha vaaram
Valika'l sumantha vaaram


The statement issued by the JUSU in Tamil follows:

வன்னி யுத்தத்தில் உயிர்நீத்த மாணவர்களையும், மக்களையும் நினைவுகூர்ந்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கை

உலக வரலாற்றில் தாட்சனியத்திற்கும், நீதியைப் பெறுவதற்கும், சட்டமுறையான பாதுகாப்பைப் பெறுவதற்கும், கைவிலங்குகளின்றிச் சுதந்திரத்துடன் நடமாடுவதற்கும் பாக்கியம் கிட்டாமை எமக்கொரு துரதிஸ்டமே.

முள்ளிவாய்க்காலில் வரையப்பட்ட வடுக்களுடனும், ஆறாத மனக்காயங்களுடனும், உள்ளெழும் அழுகுரலையும் தாங்கிக்கொண்டு, உள்ளூரத் தெரியும் ஏதொவொரு நம்பிக்கையை மனதில் எண்ணியவாறு, ஆயுதமோதலின்போது எங்களை விட்டுப்பிரிந்த எமது சக பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், எங்கள் உடன் சகோதரர்கள் ஒவ்வொருவரையும் மனதில் எண்ணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்தித்து நிற்கின்றோம்.

ஆயுதமோதலும், அதனோடு இணைந்த எண்ணற்ற மரணங்களும் நடந்துமுடிந்து; இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இருப்பினும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த இறுதி நாட்களும், நேரங்களும் இப்பொழுதும் மனதில் ஊசலாடுகின்றன. எப்பொழுதும் ஊசலாடும்.

வன்னி அவலங்கள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் நிறைவுபெற்றாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை இன்னமும் முன்னேற்றமின்றியும், மீள்நிர்மாணம் செய்யப்படாமையும் உள்ளமை வருத்தத்தை அளிக்கின்றது.

ஆயுதமோதலின் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்களின் வாழ்வில் உண்மையான மேம்பாட்டையோ, வலுவாதாரத்தையோ உருவாக்கவில்லை. மிகப்பெரியளவிலான நிதி ஒதுக்கீடுகளும், அபிவிருத்தித்திட்ட அறிவிப்புக்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றபோதும் அவைகளின் நன்மைகள் சாதாரன- உண்மையில் பாதிக்கப்பட்ட - மக்களைச் சென்றடையாமை வியப்பளிக்கின்றது. மாற்றத்தை ஏற்படுத்தாத அபிவிருத்தித் திட்டங்கள், அரசாங்க நிறுவனங்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சுமூக மீள்கட்டுமானத்திற்கான அரசாங்கத்தின் உபாயங்களில் முன்னேற்றகரமான மாற்றத்தையும், வெளிப்படையான அணுகுமுறையயையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

கல்வியினை அபிவிருத்தி செய்வதே தமிழினத்தின் உறுதியான ஏமாற்றப்பட முடியாத எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என்பதால் தமிழினத்தின் கல்வி அபிவிருத்;தி குறித்து அனைத்து சமூகத்தினருடனும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்றும், இதற்காக அனைவரும் ஒன்றினைந்த ஒரு செயற்றிட்டத்தினை தயாரிப்பதில் கவனஞ் செலுத்த வேண்டுமென்றும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழர் பிரதேசங்களில் யுத்தத்தி;ன் வடுக்களாக எஞ்சியுள்ள தாய், தந்தையரை இழந்தோர், விழிப்புலனற்றோர், அங்க அபயவங்களை இழந்தோர், கணவனையோ மனைவியையோ இழந்த குடும்பஸ்தர்கள், பிள்ளைகளை இழந்து தனித்து வாடும் பெற்றோர்கள், முதியோர்கள், உடல்செயற்றினற்றுப் போய் இருக்கும் சகோதாரர்கள் தொடர்பாகவும், அத்துடன் யுத்தத்தினால் இழந்து போயிருக்கும் கல்வி, வேலைவாய்ப்புக்கள், கடின உழைப்பினால் சம்பாதித்துக் கொண்ட சொத்துக்கள், வாழ்வாதார மூலதனங்கள், இயற்கை வளங்கள் என்பவற்றின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்வியும், சவாலும் எங்கள் முன்னால் விடப்பட்டிருக்கின்றதை ஞாபகப்படுத்துகின்றோம். இவற்றின் மீது கவனஞ் செலுத்தி, தேவையான ஆய்வினை மேற்கொண்டு, பொருத்தமான செயற்றிட்டங்களைத் தயாரித்து, மீளவும் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்முமென்று அழைத்து நிற்கின்றோம். இதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் சார்பில் எங்களின் காத்திரமான பங்கு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் உறுதி பூணுகின்றோம்.

தமிழினத்தின் சமூகஉறவு, அபிவிருத்தி, கீழ்க்கட்டுமானம் என்பவற்றில் புலம் பெயர் சமூகத்தின் முக்கியத்துவத்தை நாம் அதிகம் உணருவதால் அவர்களின் உறுதியான பங்கினை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்கின்றோம். இந்தப் பங்களிப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமையை வரவேற்பதுடன், ஒழுங்குபடுத்தப்ட்ட முறையில் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாம் எப்பொழுதும் வரலாற்றின் பால் கட்டுப்பட்டவர்களாகவே நடந்துகொள்ள விரும்புகின்றோம். தற்போதைய சூழலில் தமிழினத்தின் அரசியற்தீர்வு, மற்றும் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வரும் சூழல் காணப்படுகின்றது. எது எவ்வாறிருப்பினும், அரசயில்தீர்வு விடயங்களில் கவனஞ்செலுத்துகின்ற, அரசுடன் பேச்சு நடத்துகின்ற தலைவர்கள் மக்களால் தமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி தாங்கள் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், எந்தவொரு அரசியல் தீர்வு தொடர்பாகவும் இறுதித்தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் தமிழினத்தின் அனைத்துத் தரப்பினருடனும் திறந்த நிலையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். அரசியற்தீர்வு என்பது இரகசியமானதொன்றாக மேற்கொள்ளப்படுதல் ஆகாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

சமூகத்தின் மீதான அக்கறை, எதிர்காலம் குறித்ததான சிந்தனையில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினராகிய நாமும் எப்பொழுதும், தெளிவாகவும், பொறுப்புடனும் செயற்படும் என்பதை இந்நாளில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுக்கும் சமூக்திற்குமிடையிலான தொடர்பாடலையும், ஆக்கபூர்வமான உறவினையும் சேதப்படுத்துவதில் பல்கலைக்கழத்திற்குள்ளும், வெளியிலும் திட்டமிட்டுச் சில சக்திகள் செயற்படுகின்றபோதும், இவைகளைக் குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடன் செயற்பட்டு, சரியான பாதையில் பயனிப்பதை நாம் உறுதி செய்கின்றோம்.

இறுதியாக நாம் ஒன்றுபட்டுச் சிந்திப்பதும், செயலாற்றுவதுமே எமக்குப் பலமும், இன்றியமையாத அவசியமாகவும் உள்ளன. எனவே, தமிழினத்தின் அனைத்துச் சமூகங்களையும் ஒன்றினைத்த வகையில் சமூக விருத்திக்கானதும், அரசியல் உரிமைக்கானதுமான ஒன்றினைந்;த செயற்பாட்டை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன், அத்தகைய முயற்சிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்றும் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.

நன்றி
16-05-2011

 

Latest 15 Reports
21.09.24 16:12   Photo
JVP always denied Eezham Tamils’ inalienable self-determination: Anthropology scholar
18.09.24 21:30   Photo
Sinhala leftists need careful perusal of Lenin’s definition of Right to Self-Determination
30.08.24 15:27   Photo
Viraj exposed West’s criminalization of Tamil struggle
30.08.24 09:08  
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்
20.08.24 17:59   Photo
Viraj teaches Zone of Peace, Peace Process, Crimes Against Peace
18.08.24 21:23   Photo
Viraj Mendis: A beacon of international solidarity and a pillar in the Eelam-Tamil liberation struggle
18.08.24 16:47   Photo
Viraj in Tamil Radical Politics
18.08.24 11:27  
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?
17.08.24 12:15   Photo
விராஜ் மெண்டிஸ் விட்டுச் செல்லும் நிரப்பவியலா இடைவெளி
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
21.01.22 07:24   Photo
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது
02.11.21 15:32   Photo
13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா?
15.09.21 08:19  
English version not available
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33956