Naaka-naadu and early Mahayana Buddhism in Tamil classical texts

[TamilNet, Sunday, 09 May 2010, 00:35 GMT]
The following excerpts are in reference to the place name column on Naaka-naadu (Jaffna Peninsula) that appeared in TamilNet on 07 May 2010.

(See place name column on Naaka-naadu )

The distance and location of the Ma’nipallavam Island from the Chola capital Kaavirippoom Paddinam:

அந்தரம் ஆறா, ஆறைந்து யோசனைத்
தென்திசை மருங்கில் சென்று, திரையுடுத்த
மணிபல் லவத்திடை, மணிமே கலாதெய்வம்
அணியிழை தன்னைவைத்து, அகன்றது தான்என்-
(மணிமேகலை, 6: 211-214)

மணிமே கலா தெய்வம் வந்து தோன்றி,
அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத்
தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும்-
(மணிமேகலை, 9: 55-57)

The mythical Seat of the Buddha in the Ma’nipallavam Island, in the territory of the Naaka kings:

தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை,
பிறப்பு விளங்கு அவிரொளி அறத்தகை யாசனம்,
கீழ்நில மருங்கின் நாகநா டாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதீ தென்றே எடுக்கல் ஆற்றோர்,
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்,
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு, வெஞ்சமம் புரிநாள்,
‘இருஞ்செரு ஒழிமின்; எமதீது’ என்றே
பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்,
பொருவறு சிறப்பிற் புரையோர் ஏத்தும்
தருமபீடிகை- தோன்றியது ஆங்கென்.
(மணிமேகலை, 8: 52-63)

வேக வெந்திறல் நாகநாட் டரசர்
சினமாசு ஒழித்து, மனமாசு தீர்த்தாங்கு;
அறச்செவி திறந்து, மறச்செவி அடைத்துப்
பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும்
திருந்தொளி யாசனம் சென்றுகை தொழுதி;
(மணிமேகலை, 9: 58-62)

The location of Ma’nipallavam on the sea route from the Pandyan country to Java and on the island being uninhabited:

“சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்,
ஊனுயிர் மடிந்த துரவோய்!” என்றலும்-
… அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென,
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்,
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள், தானாங் கிழிந்தனன்;
“இழிந்தோன் ஏறினன்” என்றிதை யெடுத்து,
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்-
வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி,
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்…
(மணிமேகலை, 14: 74-86)

The Ma’nipallavam Island of Naaka-naadu, differentiated from the Island of Lanka having the Adams Peak:

ஈங்கிதன் அயலகத்து இரத்தினத் தீவத்து
ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை
(மணிமேகலை, 11: 21-22)

இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பினை எய்தி, வலங்கொண்டு மீளும்
(மணிமேகலை, 28: 107-108)

The story of the princess from Naaka-naadu and the destruction of the Chola capital:

Comes as a prophecy of a wandering hermit:

நாக நாடு நடுக்கின்று ஆள்பவன்,
வாகை வேலோன், வளைவணன் தேவி
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்,
“இரவிகுலத் தொருவன் இணைமுலை தோயக்,
கருவொடு வரும்” எனக் கணியெடுத்து உரைத்தனன்;
ஆங்கப் புதல்வன் வரூஉம் அல்லது,
பூங்கொடி வாராள்; புலம்பல் இதுகேள்:
தீவகச் சாந்தி செய்யா நாள், உன்
காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம்,
மணிமே கலைதன் வாய்மொழி யால்; அது
தணியாது இந்திர சாபமுண்டாகலின்;
ஆங்குப் பதியழிதலும், ஈங்குப்பதி கெடுதலும்,
வேந்தரை யட்டோய்! மெய்யெனக் கொண்டு, இக்
காசின் மாநகர் கடல்வயிறு புகாமல்,
வாசவன் விழாக்கோள் மறவேல்” என்று,
மாதவன் போயின அந்நாள் தொட்டும்; இக்
காவல் மாநகர் கலக்கொழி யாதலால்;
(மணிமேகலை, 24: 54-71)

Curse of the deity Ma’nimeakalaa causing the destruction:

மடவரல் நல்லாய்! நின்றன் மாநகர்
கடல்வயிறு புக்கது, காரணம் கேளாய்;
நாக நன்னாடு ஆள்வோன் தன்மகள்
பீலிவளை என்பாள், பெண்டிரின் மிக்கோள்,
பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய
புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி, இத்
தீவகம் வலஞ்செய்து, தேவர்கோன் இட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக்,
கம்பளச் செட்டி கலம்வந்து இறுப்ப,
அங்கவன் பாற்சென்று, அவன்திறம் அறிந்து,
“கொற்றவன் மகனிவன் கொள்க” எனக் கொடுத்தலும்,
பெற்ற உவகையன் பெருமகிழ்வு எய்திப்,
பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைத்
தொழுதனன் வாங்கித், துறைபிறக்கு ஒழியக்,
கலங்கொண்டு பெயர்ந்த அன்றே, காரிருள்
இலங்குநீர் அடைகரை, அக்கலங் கெட்டது,
கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது
வடிவேற் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப -
மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
நன்மணி யிழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி,
வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது!
மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள்,
“அணிநகர் தன்னை அலைகடல் கொள்க” என
இட்டனள் சாபம்; பட்டது இதுவால்;
கடவுள் மாநகர் கடல்கொளப்; பெயர்ந்த
வடிவேல் தடக்கை வானவன் போல,
விரிதிரை வந்து வியனகர் விழுங்க,
ஒருதனி போயினன், உலக மன்னவன்;
(மணிமேகலை, 25: 176-204)

The curse of Indra causing the destruction:

“வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன்
தன்மகள் பீலி வளை -தான் பயந்த
புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித்,
தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்,
வணங்கிக் கொண்டவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந்நாள், கூரிருள் யாமத்து,
அடைகரைக் கணித்தா அம்பி கெடுதலும்,
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது
அரைசற்கு உணர்த்தலும், அவனயர் வுற்று,
விரைவனன் தேடி, விழாக்கோள் மறப்பத்-
தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்-
நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த
மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள்-
முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப்,
பொன்னின் ஊசி பசுங்கம் பளத்துத்
துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி,
எழுநா ளெல்லை, இடுக்கண்வந் தெய்தா
வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட
பான்மையில், தனாது பாண்டு கம்பளம்
தானடுக் குற்ற தன்மை நோக்கி,
‘ஆதி முதல்வன் போதி மூலத்து
நாத னாவோன், நளிநீர்ப் பரப்பின்
எவ்வமுற் றான்தன தெவ்வந் தீர்’ எனப்
பவ்வத் தெடுத்துப், ‘பாரமிதை முற்றவும்
அறவர சாளவும், அறவாழி உருட்டவும்,
பிறவிதோ றுதவும் பெற்றியள்’ என்றே
சாரணர் அறிந்தோர் காரணங் கூற,
அந்த வுதவிக்கு ஆங்கவள் பெயரைத்
தந்தையிட் டனன்நினைத்; தையல்நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென்பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட் கொப்ப -அவனிடு சாபத்து
நகர்கடல் கொள்ள…
(மணிமேகலை, 29: 3-35)

On the maritime origins of the lineage of Thiraiyar who became Tho’ndaimaans and the rulers of Kaanchi:

இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
திரைதரு மரபின், உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன, வசைநீங்கு சிறப்பின்,
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்
(பெரும்பாணாற்றுப்படை, 29-38)

On 400 Yojanas of the territory of Naaka-naadu sinking in an earthquake and people moving to the north (comes as fulfilment of a prophecy of the Buddha):

பூமி நடுக்குறூஉம் போழ் தத்து, இந்நகர்,
நாகநன் னாட்டு நானூறு யோசனை;
வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்,
இதன்பால் ஒழிகென- இருநில வேந்தனும்,
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்,
“ஆவும் மாவும் கொண்டு, கழிக” என்றே,
பறையிற் சாற்றி நிறையருந் தானையோடு
இடவயம் என்னும் இரும்பதி நீங்கி,
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்-
(மணிமேகலை, 9: 20-29)

A city in Java connected to Naakar:

இந்நகர்ப் பேர்யாது? இந்நகர் ஆளும்
மன்னவன் யார்? என மாதவன் கூறும்;
‘நாக புரமிது; நன்னகர் ஆள்வோன்
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்;
(மணிமேகலை, 24: 167-170)

Shipwrecked trader reaching Nicobar Islands inhabited by naked and nomadic Naakar:

நளியிரு முந்நீர் வளிகலன் வெளவ;
ஒடிமரம் பற்றி, ஊர்திரை உதைப்ப,
நக்க சாரணர், நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்;
(மணிமேகலை, 16: 13-16)

Description of Naakar in the Nicobar Islands (they were cited as looking like bears):

கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்,
வெள்ளென் புணங்கலும், விரவிய இருக்கையில்,
எண்குதன் பிணவோ டிருந்தது போலப்,
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப்,
(மணிமேகலை, 16: 66-69)

On Naakar in Nicobar islands being cannibals and their language being different from Tamil (But a Tamil trader knew their language and conversed with them):

-அச் சூர்மலை வாழும்
நக்க சாரணர், நயமிலர் தோன்றிப்,
பக்கஞ் சேர்ந்து, “பரிபுலம் பினனிவன்;
தானே தமியன் வந்தனன்; அளியன்;
ஊனுடை இவ்வுடம்புண” வென் றெழுப்பலும் -
மற்றவர் பாடை மயக்கறு மரபின்
கற்றனன் ஆதலின், கடுந்தொழில் மாக்கள்
சுற்று நீங்கித் தொழுதுரை யாடி,
(மணிமேகலை, 16: 55-62)

Early Mahayana Buddhism in Tamil tradition:

The human Buddha and the worship of the Seat as the Buddha himself:

உயிர்கள் எல்லாம் உணர்வுபாழ் ஆகிப்
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறிவு இழந்த
வறந்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச்
சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர்
இளவள ஞாயிறு தோன்றியது என்ன;
நீயோ தோன்றினை; நின்னடி பணிந்தேன்;
நீயே யாகிநிற் கமைந்தவிவ் வாசனம்
நாமிசை வைத்தேன்; தலைமிசைக் கொண்டேன்;
பூமிசை ஏற்றினேன்; புலம்பறு கென்றே.
வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப்-
(மணிமேகலை, 10: 7:16)

On the human Buddha:

காயங் கரையில் நீ உரைத்ததை எல்லாம்
வாயே யாகுதல் மயக்கற உணர்ந்தேன்;
(மணிமேகலை, 9: 10-11)

On the human Buddha and on several Buddhas before him:

அறிவு வறிதாய் உயிர்நின்ற காலத்து,
முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத்,
துடித லோகம் ஒழியத் தோன்றிப்,
போதி மூலம் பொருந்தி யிருந்து,
மாரனை வென்று, வீர னாகிக்,
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை;
இறந்த காலத் தெண்ணில் புத்தர்களும்
சிறந்தருள் கூர்ந்து, திருவாய் மொழிந்தது.
(மணிமேகலை 30, 7-15)

On the Future Buddha:

சக்கர வாளத்துத் தேவர் எல்லாம்
தொக்கொருங்கு ஈண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப;
இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து,
விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன,
ஈரெண் ணூற்றோடு ஈரெட் டாண்டில்
பேரறிவாளன் தோன்றும்; ...
(மணிமேகலை, 12: 72-78)

Associating the Adams Peak with Aadhi Buddha (Ganga in this verse is a river in the Island of Lanka) and the worship of the Footprint:

அவருடன் ஆங்கவன் அகன்மலை யாடிக்
கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி

“ஈங்கு வந்தீர் யா?” ரென்று எழுந் தவன்
பாங்குளி மாதவன் பாதம் பணிதலும்-
“ஆதி முதல்வன், அறவாழி ஆள்வோன்,

தொன்று காலத்து நின்றறம் உரைத்த
குன்ற மருங்கிற் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின், ஈங்கிது
பாதபங் கயமலை எனும்பெயர்த்து ஆயது;
தொழுது வலங்கொள்ள வந்தேன்; ஈங்கிப்
பழுதில் காட்சியீர்! நீயிரும் தொழும்” என
(மணிமேகலை, 10: 55-70)


ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்
(மணிமேகலை, 12: 108-109)

ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை
அறவியங் கிழவோன் அடியிணை யாகிய
(மணிமேகலை, 11: 21-22)

On the prevalence of the mythical Seat at Ma’nipallavam even before the birth of the Human Buddha:

பெரியவன் தோன்றா முன்னரிப் பீடிகை
கரியவன் இட்ட காரணந் தானும்
(மணிமேகலை, 25: 54-55)

On soul and rebirth:

உடற்கழு தனையோ? உயிர்க்கழு தனையோ?
உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே?
உயிர்க்கழு தனையேல், உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது;
அவ்வுயிர்க் கன்பினை யாயின், ஆய்தொடி!
எவ்வுயிர்க்காயினும் இரங்கல் வேண்டும் -
(மணிமேகலை, 23: 72-78)

On rolling Dharmachakra:

… இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
(மணிமேகலை, 10: 25-26)

On the Tripple Gem:

புத்த தன்ம சங்கம் என்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
(மணிமேகலை, 30: 3-4)

On Prajgnaa Paaramithaa

அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்துத்
துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப்
(மணிமேகலை, 26: 45-46)

Tamil Buddhist devotional hymns of early Mahayana Buddhism found in Ma'nimeakalai:

மாரனை வெல்லும் வீர! நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய்! நின்னடி
பிறர்க்கறம் முயலும் பெரியோய்! நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின்னடி
எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி
கண்பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின்னடி
தீமொழிக்கு அடைத்த செவியோய்! நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய்! நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய்! நின்னடி
உரகர் துயரம் ஒழிப்போய்! நின்னடி
வணங்குதல் அல்லது, வாழ்த்தலென் நாவிற்கு
அடங்காது!
(மணிமேகலை, 11: 61-72)

புலவன், தீர்த்தன், புண்ணியன், புராணன்,
உலக நோன்பின் உயர்ந்தோய் எங்கோ!
குற்றங் கெடுத்தோய், செற்றஞ் செறுத்தோய்!
முற்ற வுணர்ந்த முதல்வா எங்கோ!
காமற் கடந்தோய், ஏமம் ஆயோய்!
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் எங்கோ!
ஆயிர வாரத்து ஆழியந் திருந்தடி,
நாவா யிரமிலேன் ஏத்துவது எவன்?
(மணிமேகலை, 5: 98-105)

Forest and hunting tribes of Point Calimere in the 7th century CE:

கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதானய லேயிருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.

காடேல்மிக வாலிது காரிகை அஞ்சக்
கூடிப்பொந்தி லாந்தைகள் கூகை குழற
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில் கொண்டாயே.

நெடியானொடு நான்முக னும்அறி வொண்ணாப்
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள்அன்ப தாயிடங் கோயில்கொண் டாயே

(திருக்கோடிக்குழ்கர், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்: 1,4,9)

 

Latest 15 Reports
04.02.24 15:40   Photo
சியோனிசம் காணும் தோல்வி ஈழத்தமிழருக்குப் பலன் தரவல்ல படிமை மாற்றத்தின் அறிகுறி
24.04.22 05:44  
தீவின் நெருக்கடிச் சூழலில் ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய நிலைப்பாடுகள்
09.04.22 14:44   Photo
குறிதவறும் ஈழத்தமிழர் தலைமைகளுக்கு வரலாறு தருகின்ற எச்சரிக்கை
21.01.22 07:24   Photo
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது
02.11.21 15:32   Photo
13 ஆம் சட்டத்திருத்தத்தால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர்கொள்ள முடியுமா?
15.09.21 08:19  
English version not available
17.05.21 19:23   Photo
Ananthi blames war criminal Silva for blocking collective memorial at Mu'l'livaaykkaal
09.04.21 14:46  
English version not available
23.03.21 12:41   Photo
No focus on Tamil genocide, geopolitics gets played out in Geneva in favour of QUAD formation
21.03.21 13:34   Photo
Navi Pillay explains ‘human rights’ limitations in Geneva on Tamil genocide
15.03.21 20:36   Photo
Deceived Tamil activists in UK falsely claimed ‘substantial changes’ to Zero draft
09.03.21 21:34   Photo
UK repeatedly wronged Tamils says hunger-striker, demands genocide justice
26.02.21 11:53   Photo
Tamils witness false dilemma in Geneva as geopolitical formations pit against each other
19.02.21 14:02   Photo
UK not prepared to push for ICC option in new UNHRC Resolution
07.02.21 23:16   Photo
Unprecedented P2P uprising paves the way for rights-oriented politics of Tamils and Muslims
 
Find this article at:
http://www.tamilnet.com/art.html?catid=71&artid=31718